நெல்லை மாவட்டத்தில் இரண்ட வருடங்களுக்கு பின்னர் கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் பிசான சாகுபடியைத் தொடங்கியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை முழுமையாக பெய்தால் விவசாயம் செழிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது ஆயிரக் கணக்கான ஏக்கரில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இருந்தும் கடைமடை நிலங்களில் விவசாயம் நடைபெறுவது என்பது வடகிழக்கு பருவமழை முழுமையாக பெய்தால் மட்டுமே சாத்தியம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.