தமிழ்நாடு

செய்தி எதிரொலி: அடிப்படை வசதிகளால் புத்துயிா் பெறும் இருளர் குடியிருப்பு

செய்தி எதிரொலி: அடிப்படை வசதிகளால் புத்துயிா் பெறும் இருளர் குடியிருப்பு

JustinDurai
பெரம்பலூர் அருகே இருளர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் குறித்து 'புதிய தலைமுறை' செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அங்கு சுகாதாரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள இருளர் குடியிருப்பில் கட்டிமுடிக்கப்பட்ட கழிவறை, நல வாழ்வு மையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். அதேபோல் போதிய குடிநீர் வசதி இல்லை என்றும் வீடுகள் கட்டித் தரவில்லை என்றும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும் இருளர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இது தொடர்பான செய்தி 'புதிய தலைமுறை' இணையதளத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து குரும்பலூர் இருளர் குடியிருப்பில் தற்போது கழிவறையை சீர்செய்யும் பணி, கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இருளர் நலவாழ்வு மையம் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் இருளர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இந்தநிலையில் அனைவருக்கும் வீடு கட்டித்தர வேண்டும் என்று இருளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.