தமிழ்நாடு

நிலவேம்பு கசாயம் அங்கீகரிக்கப்பட்ட மருந்து: சுகாதாரத்துறை செயலர்

நிலவேம்பு கசாயம் அங்கீகரிக்கப்பட்ட மருந்து: சுகாதாரத்துறை செயலர்

webteam

நிலவேம்புக் கசாயம் அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருந்து என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தருமபுரியில் கிராமப்புற மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “நிலவேம்பு கசாயம் என்பது அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்து. இது நாமே தயாரித்து காய்ச்சிக் குடிக்கும் மருந்தல்ல. நிலவேம்பு மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இதனால் பாதிப்பு எதுவும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மீது நவடிக்கை எடுப்போம். இதுகுறித்து பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கேள்விகள் எழுப்பினால், சித்த மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் மூலம் விளக்கமளிக்க தயாராகவுள்ளோம்.” என்று கூறினார்.