தமிழ்நாடு

நிலவேம்பு பற்றி அவசரப்பட்டு கருத்துக்கூற வேண்டாம்: விஜயபாஸ்கர்

நிலவேம்பு பற்றி அவசரப்பட்டு கருத்துக்கூற வேண்டாம்: விஜயபாஸ்கர்

webteam

நிலவேம்பு கசாயத்தால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது எனவும், அது குறித்து யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும், பல மாவட்டங்களில் காய்ச்சல் குறைந்து வருவதாகவும் கூறினார். நிலவேம்பால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது எனவும் இது ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாவும், இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். நிலவேம்பு கசாய விநியோகத்தில் தமது நற்பணி மன்றத்தினர் ஈடுபட வேண்டாம் என கமல்ஹாசன் கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்தார். சிங்கப்பூர், ‌மலேசியா ஆகிய நாடுகள் நம்மிடம் நிலவேம்பைக் கேட்டுள்ளனர் அவர் தெரிவித்தார்.