திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும் 22 மாத திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை என்றும் கூறினார் அவர்.
இதுகுறித்து பேசுகையில், “நல்லாட்சிக்கு நல்லாதரவு தருகின்ற வகையில் மிகப்பெரிய அங்கீகாரத்தை எங்களுக்கு தர மக்கள் தயாராக இருக்கின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக ஆட்சியில் எவ்வித சான்றிதழ் சரிபார்ப்புகளும் இல்லாமல் நியமிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான், ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு பணி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னும் 5 நாட்களில் 800 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. 22 மாத கால திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை” என்றார். மேலும் பேசுகையில், தமிழகத்தில் சாணிப் பவுடர்க்கு தடை விகிக்கின்ற அரசாணை தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்