தரவரிசை பட்டியல் வெளியிட்ட அமைச்சர் மா.பாலசுப்ரமணியன்
தரவரிசை பட்டியல் வெளியிட்ட அமைச்சர் மா.பாலசுப்ரமணியன் FACEBOOK
தமிழ்நாடு

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 7.5 இடஒதுக்கீட்டில் சேலம் மாணவி முதலிடம்!

PT WEB

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியலை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பொதுப்பிரிவில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரத்தை சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா எனும் மாணவி 569 மதிப்பெண்களுடன் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.