மா.சுப்பிரமணியன் pt desk
தமிழ்நாடு

தமிழகத்தில் இனிமேல் இது இலவசமாக வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன சூப்பரான அப்டேட்.. என்ன தெரியுமா?

தமிழகத்தில் இனிமேல் இது இலவசமாக வழங்கப்படும் அமைச்சர் சொன்ன சூப்பரான அப்டேட்.. என்ன தெரியுமா?

Vaijayanthi S

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு அதைத் தடுக்கவும், கண்டறியவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்னதான் மருத்துவதுறை அபாரமாக வளர்ச்சி அடைந்தாலும் இப்போது வரை புற்றுநோய்க்கான மருந்து என்று இன்றும் இல்லை.. அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக புற்றுநோய் தமிழகத்தில் புற்றீசல் போல் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்த நோயால் ஆண்டுதோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   

இந்நிலையில் இந்த புற்றுநோய்கான தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் அனைத்தும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றநிலையில், கடந்த செப்டம்பர் மாதம் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையிலும், அவை மேற்கொண்டு வளராமல் தடுக்கும் வகையிலும் பிரத்யேக தடுப்பூசியொன்று கண்டுபிடித்திருப்பதாக ரஷ்யா கூறியிருந்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்  1 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.. அதிலும், சமீபகாலங்களில் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. அதனால் இதற்கான 16வது ஆண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு மற்றும் ரோட்டரி சார்பில் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், இன்று நான் காலையில் இருந்து 13 கிலோமீட்டர் நடந்துள்ளேன். சில பேர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே நடந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. தினம்தோறும் நடப்பவர்களுக்கும் ஓடுபவர்களுக்கும் புற்றுநோய் வருவதில்லை என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

புற்றுநோய் தடுப்பூசி திட்டத்திற்காக 38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. டெண்டர் முடிந்தவுடன் இந்தியாவில் எங்கும் இல்லாமல் தமிழகத்தில் புற்றுநோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை தொடங்கினால் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் திட்டம் ஆரம்பமாகும்..

உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேரில் 58 பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது.. இந்தியாவில் 1 லட்சம் பேரில் 28 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழ்நாட்டில் முதல்முறையாக 1 முதல் 14 வயதுடைய இளம் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.