woman with fever  AI generated image
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள்!

பருவமழை காலத்தில் ஏற்படும் நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Rishan Vengai

தமிழ்நாடு முழுவதும் பருவமழை காரணமாக டெங்கு, சிக்கன் குனியா, டைபாய்டு, எலிகாய்ச்சல் போன்ற காய்ச்சல் நோய்கள் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறையாத காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக அரசு அல்லது அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பருவமழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்கன் குனியா, டைபாய்டு மற்றும் எலிகாய்ச்சல் போன்ற நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல்

குறையாத காய்ச்சல், கடுமையான தசைவலி, வயிற்று வலி, மூட்டு வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்யாமல், உடனடியாக அரசு அல்லது அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலைமையைக் கையாள அரசுமருத்துவமனைகளில் காய்ச்சல்வார்டுகளை அமைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்கள்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.