வெப்பம் சார்ந்த நோய்கள் குறித்து சுகாதாரத் துறை வழிகாட்டுதல் அறிக்கை வெளியீடு pt web
தமிழ்நாடு

மக்களே உஷார்| வெப்பம் சார்ந்த நோய்கள்.. சுகாதாரத் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்!

வெப்பம் சார்ந்தா நோய்களை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

PT WEB

தமிழ்நாடு சுகாதாரத் துறை கோடை கால வெப்ப நோய்களைத் தவிர்க்க வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. வெப்ப நோய்களின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. உடல் வெப்பநிலை அதிகரித்தல், தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை முக்கிய அறிகுறிகள். தண்ணீர் பருகுதல், குளிர்ந்த இடத்தில் ஓய்வு, மருத்துவ உதவி தேவைப்படும்.

கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது, நம் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தமிழ்நாடு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெப்ப நோய்களிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வெப்ப நோய் அறிகுறிகள் என்ன..?

heatstroke
  • சரும மாற்றங்கள்-சூடான, வறட்சியான மற்றும் சிவந்த சருமம்.

  • உடல் வெப்பநிலை-காய்ச்சல் போல உடல் வெப்பம் 104°F அல்லது அதற்கு மேல் அதிகரித்தல்.

  • செரிமான கோளாறு-குமட்டல் மற்றும் வாந்தி.

  • வலி- கடுமையான தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு, கால் பிடிப்பு

  • மனநிலை மற்றும் சுவாசம்: மூச்சுத் திணறல், நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம் அல்லது பதற்றம்

பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன..?

மேற்கண்ட அறிகுறிகள் தங்களுக்கோ அல்லது தங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கோ தெரிந்தால்,

  • தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும்.

  • அருகிலுள்ள குளிர்ந்த அல்லது நிழலான பகுதிக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும்.

  • குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 

  • கால் தசைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தால், நோயாளி மயக்க நிலைக்குச் சென்றால், உடல் வெப்பநிலை 104°Fக்கு மேல் தொடர்ந்து இருந்தால் தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸ் எண்ணையோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லவும். 

  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் என்பதால் கூடுதல் கவனம் தேவை

இப்படியான அறிக்கையை வெளியிட்டிருக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை பொதுமக்களுக்கு கோடை வெப்ப நோயை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கையாக கூறுகிறது.