கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டும் வரும்படி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊத்தங்கரை அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் 2002 ஆம் ஆண்டு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒருசில ஆண்டுகளிலேயே இந்த சுகாதார வளாகம் மூடப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள், மாணவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மூடி வைத்துள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்கும் படி பெண்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விசாரித்த ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் மூடப்பட்டுள்ள சுகாதார அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்று உறுதி அளித்தார்.