தமிழ்நாடு

ஏசி வெடித்து தலைமை ஆசிரியை உயிரிழப்பு

ஏசி வெடித்து தலைமை ஆசிரியை உயிரிழப்பு

webteam

கிருஷ்ணகிரியை அடுத்த சாந்தி நகரில் குளிர்சாதனக்கருவி வெடித்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தார்.

மோட்டூர் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆஞ்சலாமேரியும், மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் அவரது கணவர் ஆல்பர்ட்டும் ஏசி உதவியுடன் உறங்கியுள்ளனர். அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு ஆல்பர்ட் திரும்பி வந்தபோது,

படுக்கை அறையில் புகை மூட்டம் காணப்பட்டதுடன், குளிர்சாதன கருவி வெடித்து ஆஞ்சலாமேரி உயிரிழந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த த‌கவலின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக ஏசி ஸ்டெப்லைசர் வெடித்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.