மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

Headlines| இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் - மம்தா பானர்ஜி To ஆஸி. இடம் தடுமாறும் இந்திய அணி!

பிரான்ஸ் தலைநகர்பாரீசில் புணரமைக்கப்பட்ட பழமையான தேவாலயம். ராணுவ ஆட்சியை அறிவித்து மக்களிடம் மன்னிப்புக் கோரிய தென்கொரிய அதிபர். வாய்ப்பளித்தால் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் மம்தா பானர்ஜி. உள்ளிட்டவைகளை தலைப்புச் செய்தியில் பார்க்கலாம்...

PT WEB

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புனரமைப்பு பணிகளுக்கு பின் மீண்டும் திறக்கப்படும் 900 ஆண்டு பழமையான தேவாலயம்...
திறப்பு விழாவில் பங்கேற்க குவிந்த ட்ரம்ப், மன்னர் சார்லஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள்...

ராணுவ ஆட்சியை அறிவித்து பதற்றம் ஏற்பட காரணமானதாக கூறி மக்களிடம் மன்னிப்பு கோரிய தென்கொரிய அதிபர்... நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்திற்கு முன்னதாக உருக்கமாக உரை...

India alliance

தேங்காய் அதிகம் விளையும் நாடுகளில் ஒன்றான, இலங்கையிலேயே அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனால், ஒரு தேங்காயின் விலை 200ஐ கடந்துள்ளது

வாய்ப்பளித்தால் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கத் தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி... திரிணமூல் கட்சியை கூட்டணியில் முதன்மையானதாக ஏற்க சம்மதம் என உத்தவ் சிவசேனாவின் சஞ்சய் ராவத் கருத்து..

மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஹைப்பர்லூப் ரயிலுக்கான பரிசோதனை குழாய் பாதை தயார்...
சென்னைக்கு அருகே தையூரில் அமைந்துள்ள பரிசோதனைக்குழாய் பாதையை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்...

நாடெங்கும் துவரம்பருப்பு விலை அடுத்த சில மாதங்களில் கணிசமாக உயர வாய்ப்பு... கர்நாடக மாநிலம் கலபுரகியில் கடும் மழை அதைத் தொடர்ந்த வறட்சியால்பயிர்கள் சேதமடைந்ததன் எதிரொலி...

Travis Head

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மைனஸ் 4 டிகிரி அளவிற்கு உறைய வைக்கும் குளிர்... குளிரை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிவதால் சூடுபறக்க நடைபெறும் சுற்றுலா வணிகம்...

அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 157 ரன் முன்னிலை
பெற்றது ஆஸ்திரேலியா... 141 பந்தில் 140 ரன் விளாசி மிரட்டிய
ட்ராவிஸ் ஹெட்... இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்