இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பிரதமரின் தமிழ்நாடு வருகை முதல் கனமழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
நவம்பர் 22ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு... மேற்கு - வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என கணிப்பு...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்... கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை..
பிஹார் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி... கோவையில் நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று, நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..
மதுரை, கோவையில் மெட்ரோ சேவை தொடங்குவது பற்றிய திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு... திட்டம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம்....
தமிழகத்தில் 6 கோடியே ஏழு லட்சம் வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்... 94.74 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம்....
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏவில் மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 1,270ஆக அதிகரிப்பு... 625 காலி பணியிடங்களை கூடுதலாக அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி...
தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பார் கவுன்சில் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு... அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தல்...
நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு... ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம்...
தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு... வரும் 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிப்பு...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால், தேவஸ்வம் போர்டு சார்பில் சூடான சுக்கு குடிநீர், பிஸ்கட்கள் விநியோகம்...