இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் 6-12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு வரை விவரிக்கிறது.
சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்... திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி... தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு... டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 6 கோடி எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்... 12 மாநிலங்களில் இதுவரை 97 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்...
பிஹார் மாநில முதல்வராக 10ஆவது முறையாக நிதிஷ்குமார் வரும் 20ஆம் தேதி பதவியேற்பார் என தகவல்... பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் மும்முரம்...
பணத்திற்காக தந்தை லாலுவுக்கு சிறுநீரகம் கொடுத்ததாக குடும்பத்தினர் வசை பாடியதாக மகள் ரோஹிணி ஆவேசம்... காலணியால் தாக்க வந்ததாகவும் சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவே குடும்பத்தை விட்டு வெளியேறியதாகவும் பதிவு...
வெளிநாட்டவர் குடியேற்றங்களை குறைக்க கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் பிரிட்டன்... வேலைவாய்ப்புகள் பாதிப்பதிலிருந்து சட்டம் ஒழுங்கு வரை பிரச்சினை என போராடும் மக்கள்...
விஸ்வாசம் பாடலை மீண்டும் பாடி வீடியோ வெளியிட்ட பிஹார் எம்எல்ஏ மைதிலி தாக்கூர்... பாடல் திறமைக்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் டி.இமான்.
ஏடிபி டென்னிஸ் போட்டியில் இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று ஜானிக் சின்னர் சாதனை... ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸை நேர் செட்களில் வீழ்த்தினார்...