Pt Headlines Pt Web
தமிழ்நாடு

Headlines | என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் to ஈரான் போரை ஒத்திவைத்த அமெரிக்கா!

புதிய தலைமுறையின் இன்றைய தலைப்புச் செய்திகளானது என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முதல் ஈரான் போரை ஒத்திவைத்த அமெரிக்கா வரை விவரிக்கிறது..

PT WEB

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

தமிழ்நாட்டில் வரும் 26, 27ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்... சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவிப்பு...

காவிரிப் படுகை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை நேர்காணல் செய்த மு.க.ஸ்டாலின்.... வேட்பாளராக விரும்புவோரிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்...

திமுக கூட்டணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... பெரும் இழுபறிக்கு பின் கையெழுத்தானது ஒப்பந்தம்....

திமுக - சிபிஎம்

5 தொகுதிகள் ஒதுக்கீடு என்ற உடன்பாட்டில் திருப்தி இல்லை என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி... ஆனாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம் என்றும் உறுதி...

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், கொமதேக என இதுவரை 7 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு... இதுவரை ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளில் 7 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகள் முடிவு...

தேசிய ஜனநாயக கூட்டணியில் கையெழுத்தானது தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம்.... கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு 27 இடங்களை ஒதுக்கியது அதிமுக...

தேசிய ஜனநாயக கூட்டணியில் 3 பெரிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு... மற்ற சிறு கட்சிகளுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்... அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு...

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயலுடன் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் ஆலோசனை.... பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும், தனி சின்னத்தில்தான் களம் காண்போம் என்றும் பேட்டி...

எண்ணிக்கையை இறுதி செய்தால்தான் கூட்டணியை உறுதி செய்ய முடியும்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேராதது குறித்த கேள்விக்கு டாக்டர் கிருஷ்ணசாமி பதில்...

திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளுடன் 2028இல் ராஜ்ய சபா சீட்டும் பெற வேண்டும்... திருமாவளவன் தலைமையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் உயர்நிலைக் குழு தீர்மானம்....

திருமாவளவன் - ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... கொலை, கொள்ளை சம்பவங்களை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை என்றும் அன்புமணி குற்றச்சாட்டு....

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு... இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில், மனுக்களை திரும்பப்பெற வரும் 26ஆம் தேதி கடைசி நாள்...

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது.... காங்கிரஸ் 16, திமுக 12, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதிகளில் போட்டி....

தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுப்பு.... புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள்...

கூட்டணிக்காகவும், கட்சியின் நலன் கருதியும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை... புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதிய தலைமுறைக்கு விளக்கம்...

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட பிறகு திடீர் கூட்டணி அமைத்த தவெக... நேயம் மக்கள் கழகத்துக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி தொகுதிகள் ஒதுக்கீடு...

சாத்தான்குளம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்.... 30ஆம் தேதி தண்டனை விவரம் வெளியாகும் என மதுரை நீதிமன்றம் தீர்ப்பு....

சாத்தான்குளம் தந்தை, மகன் மீது பதியப்பட்ட வழக்கே பொய்யானது... இருவரும் கொலை செய்யப்பட்டது தடய அறிவியல் ஆய்வில் உறுதியாகியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு...

சாத்தான்குளம் கொலை வழக்கு

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் திறக்கப்படும் உணவகங்கள்... வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை...

புதுக்கோட்டையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் டீக்கடைகள்... உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண உரிமையாளர்கள் கோரிக்கை...

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு... 19 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்...

சிக்னல் பணி காரணமாக ஜோலார்பேட்டை மார்க்கத்தில் இன்று 6 ரயில்கள் ரத்து... சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு...

நாட்டுக்கு தேவையான எரிபொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை... மேற்காசிய போரால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம்...

மேற்காசியப் போர் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கலாம்... கொரோனா பேரிடரை ஒன்று சேர்ந்து எதிர்கொண்டதைப் போல இதற்கும் தயாராக வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்...

பழங்குடியினரை வனவாசி என அழைத்து அவர்களது உரிமைகளை பறிக்க முயற்சி... பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

ராகுல்காந்தி

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஆட்டம் காட்டும் தங்கம் விலை... நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 7 ஆயிரத்து 600 ரூபாய் குறைந்த நிலையில், 5 ஆயிரத்து 360 ரூபாய் உயர்வு....

வெள்ளி விலை கிலோவுக்கு 15ஆயிரம் ரூபாய் சரிவு... சென்னையில் கடந்த 5 நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கு விற்பனை...ஈரான் நாட்டிலுள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்.... 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு....

எரிசக்தி விலையை குறைக்கவே ட்ரம்ப் தற்காலிக போர் நிறுத்தம்... அமெரிக்கா உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என ஈரான் திட்டவட்டம்...

மேற்காசியப் போரில் இதுவரை இந்தியர்கள் 6 பேர் உயிரிழப்பு... இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம்...

மேற்காசிய போர் நீண்ட காலம் தொடர்ந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதம் வரை குறையும் என எச்சரிக்கை... தொடர்ச்சியான எரிசக்தி செலவு பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும் அபாயம்...

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ரூபியோவுடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை... உலகளாவிய பொருளாதாரம், மேற்காசிய போர் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல்...

நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி 90 சதவீதம் உயர்ந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கவலை... எரிசக்தி துறையில் சுயசார்பு அடைந்து வருவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில் விமர்சனம்...

மக்களவை தொகுதிகளை 50 விழுக்காடு அதிகரிப்பதுடன், மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு... எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க மத்திய அரசு திட்டம் என தகவல்...

நாடாளுமன்றம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை 2034ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வாய்ப்பு... அரசுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி தகவல்...

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம் இல்லை... மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தகவல்...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் குறைபிரசவத்தை தடுக்கும் திட்டம்... பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை...

கொலம்பியாவில்125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து விபத்து... ஒருவர் உயிரிழந்த நிலையில் 77 பேர் காயம்... காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்...

படம் இயக்குவதாக வாங்கிய 4 கோடியே 25 லட்ச ரூபாயை தயாரிப்பாளருக்கு வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும்... இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

உலகளவில் வசூல் சாதனையில் மிரட்டும் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2... படம் வெளியான 4 நாட்களில் 761 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிப்பு...

தென் கொரியாவில் புதிய புத்தாக்க ஆய்வகத்தை தொடங்கிய விப்ரோ... வாகன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த திட்டம்...