தமிழ்நாடு

சக ஆசிரியையை திட்டியதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை ஆசிரியர்..!

சக ஆசிரியையை திட்டியதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை ஆசிரியர்..!

webteam

நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளியில் சக ஆசிரியையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக வந்த புகாரையடுத்து தலைமை ஆசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ராசிபுரம் அடுத்து ஆர்.புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக மதியழகன் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் பணி ஓய்வு முடிந்த நிலையில் மே மாதம் வரை அவருக்கு பணி நீட்டிக்கப்பட்டது. இந்த பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மதியழகன் சக ஆசிரியையை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர், மனித உரிமை ஆணையம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் கொடுக்கப்பட்டடிருந்தது. விசாரணைக்குப் பின்னர் தலைமை ஆசிரியர் மதியழகன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.