தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கும்போது ரேஷன் கடைகளுக்கு வெளியே பேனர் வைக்க தடை

Sinekadhara

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிலையில், நியாயவிலைக் கடைகளின் அருகில் அரசியல் கட்சிகள் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதார்களுக்கு ரூ.2500 தொகையும், அதனுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் திராட்சை, முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் கரும்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பரிசு டோக்கன்களை கட்சிக்காரர்கள் வழங்காமல், அரசு ஊழியர்கள் மட்டுமே வழங்கவேண்டும் எனவும், மேலும் இந்த பரிசுகளை பாகுபாடின்றி ரேஷன் கடைகளில் மட்டுமே வழங்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், நியாயவிலைக் கடைகளின் அருகில் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம், பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய பையில், முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வரின் படங்கள் இடம்பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.