தமிழ்நாடு

லோக் ஆயுக்தா சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

லோக் ஆயுக்தா சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

webteam

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க எசுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், பொதுமக்களுக்கு சேவை செய்யும் அதிகாரிகளின் ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்தா அமைப்பை 20 மாநிலங்கள் நிறுவியுள்ளன. தமிழகத்தில் லோக் ஆயுத்தா அமைப்பை உருவாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 10 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.