ஹவாலா பணம் pt desk
தமிழ்நாடு

செங்குன்றம் அருகே ₹1 கோடிக்கு மேலான ஹவாலா பணம் பறிமுதல்..!

சென்னை செங்குன்றம் அருகே ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

PT WEB

செங்குன்றம் அருகே சோதனை சாவடியில் கொரியர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட காவல்துறையினர், அதில் ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். லாரியில் இருந்த இருவரும் விசாரணையில் தெளிவான பதில் அளிக்காததால், அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்படுகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளும் இதில் இணைந்து விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை செங்குன்றம் சோதனை சாவடி அருகே செங்குன்றம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கொரியர் லாரியை சோதனை இட்ட பொழுது லாரியில் ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவர்கள் முன்னுக்குப் பின்பாக பதிலளித்துள்ளனர்.

பணம்

இந்தசூழலில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரி மற்றும் இருவரை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், விசாரணையின் பிறகு முழு விவரம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சௌகார்பேட்டையில் தங்கம் வாங்குவதற்காக பணம் எடுத்து வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.