சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.77 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் தனியார் விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த விமானத்திலிருந்த பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சென்னையைச் சேர்ந்த யூசூப் என்ற பயணியின் சூட்கேசில் 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ மற்றும் இந்திய பணமும் கார்பன் பேப்பரில் சுற்றப்பட்டு மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஹவாலா பணம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பணத்தை கடத்த முயன்ற யூசூப் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட யூசுப்பிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.