தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர், தமிழில் அறிமுகமாகும் படம், ‘நோட்டா’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். மெஹ்ரின் ஹீரோயின். சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள அரசியல் த்ரில்லர் படமான இது, நாளை (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கதில் தமிழிலில் ஒரு பதிவிட்டுள்ளார் ஹர்பஜன் சிங். அதில், “வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி? இப்போதான் வீடியோ பார்த்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன். இந்தப் பேரு, புகழ் எல்லாம் தமிழ்மக்கள் குடுத்து வாழ வைக்குற தெய்வம். உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
நோட்டா திரைப்படத்தை புரமோட் செய்யும் வகையில் இணையதள யுடியூப் சேனலில் ஒரு இண்டர்வியூ கொடுத்திருந்தார். அது கொஞ்சம் வித்தியாசமாக தமிழ் கற்பது போல் இருந்தது. அந்த நிகழ்ச்சியை, “அகர முதல எழுத்தெல்லாம் ஹர்பஜன் சிங் முதற்றே உலகு” என்று தொடங்கினார்கள். அந்த வீடியோவை பார்த்துவிட்டுதான் ஹர்பஜன் சிங் தனது வாழ்த்தினை கூறியுள்ளார்.