மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூத்த பேராசிரியரான ஹனுமந்தராவ் திருப்பதி எஸ்வி மருத்துவ அறிவியல் நிறுவன டீனாக உள்ளார்.
இதேபோல், ஜம்முவின் விஜய்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக சக்தி குமார் குப்தா என்பவரும் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக தேவ் சிங் கடோச் என்பவரும் ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குராக விர் சிங் நேகி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.