உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகையாக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையி, “தனியார் வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும், புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை போல உதவித்தொகையை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரியலூர், காஞ்சிபுரம், திருச்சி, சேலம், மேட்டூர், பழனி, ஆரணி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.