தமிழ்நாடு

மெரினா கடற்கரை மணலில் கேட்பாரற்றுக் கிடந்த கைத்துப்பாக்கி – போலீசார் விசாரணை

webteam

மெரினா கடற்கரை மணலில் கேட்பாரற்றுக் கிடந்த கைத்துப்பாக்கியை மீனவர் ஒருவர் கண்டெடுத்து கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள எல்லையம்மன் கோவில் தெரு நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் நந்தகோபால். இவர் கடற்கரையில் கிடக்கும் காசுகளை சேகரித்து வந்துள்ளார். அப்போது கடற்கரை மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

இந்நிலையில் அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் சைரேஸ் என்பவரிடம் துப்பாக்கியை ஒப்படைத்ததை அடுத்து ஆய்வாளர் சைரேஸ், துப்பாக்கியை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அதன்மேல் HW 1G Arminius kal 9mm knall S.N 1118695 Made in Germany Revolver என்று இருந்துள்ளது.

துப்பாக்கியில் தோட்டாக்கள் ஏதும் இல்லாத நிலையில், ஷஇந்த துப்பாக்கியின் உரிமையாளர் யார் என தெரியாததால் அருகில் உள்ள டி-5 மெரினா காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியத்திடம் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து கைத்துப்பாக்கி யாருடையது என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.