அப்துல் கலாம் மணிமண்டபத்தில் பகவத் கீதை வைக்கப்பட்டிருப்பதை விமர்சிப்பவர்களின் சிந்தனையில் பழுது இருப்பதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.
சென்னை எழுப்பூரில் மதிமுக மாணவர் அணியினரின் நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அப்துல் கலாம் மணிமண்டபத்தில் திருக்குறளுக்குப் பதிலாக பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திருக்குறளை விட பகவத் கீதை உயர்ந்ததா எனவும் அவர் வினவினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, பகவத் கீதை அப்துல் கலாம் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருப்பதை விமர்சிப்பவர்களின் சிந்தனையில் பழுது இருப்பதாகக் கூறினார். வீணையும், பகவத் கீதையும் மதசார்பின்மையின் பிரதிபலிப்பு தான் என்றும் அதனாலேயே அவை அப்துல் கலாமின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.