அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் முழுமையாகத் திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தவிட்டுக்கு 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், நெல்லுக்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மட்டுமே சந்தைக் கட்டணம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன.