தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.எதிரொலி: தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஜி.எஸ்.டி.எதிரொலி: தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்

webteam

பட்டாசு மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி, விருதுநகரில் பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4 வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பட்டாசு உரிமையாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமும் இன்று நடைபெற உள்ளது. 
பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதமாக குறைக்க வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டத்தால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 811 பட்டாசு ஆலைகளும், 600 பட்டாசுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். இப்போராட்டம் தொடரும் பட்சத்தில் விருதுநகர் முழுவதும் உள்ள அச்சகப் பணிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.