ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாயல்குடியை அடுத்த மாரியூர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் இருவேறு சமூகத்தினரிடையே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், வன்முறை வெடித்தது. இதில் இருதரப்பினரின் இருசக்கர வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.