குரூப் 4 தேர்வு முடிவுகள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு  pt web
தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.

PT WEB

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-(குரூப்-4) பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.‌

இந்தத்தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் (Marks) மற்றும் தரவரிசை நிலை (Rank Status) ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான  https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப்பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது.

TNPSC Group4Exam

இந்தத்தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அறிவிப்பின்போது 3935 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.‌ இந்த குரூப்-4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.