தமிழ்நாடு

காலை 6 முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் இயங்கும்

காலை 6 முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் இயங்கும்

jagadeesh

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 35 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், வரும் 29 ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார், அதில் "காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். மருந்துகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் இயங்கும். கோயம்பேடு காய்கறி சந்தையில் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிக்குள் அனைத்து பொருள்களையும் இறக்கிவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.