தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு: ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கலுக்கு கால அவகாசம்

கிரானைட் முறைகேடு: ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கலுக்கு கால அவகாசம்

webteam

கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் அறிக்கையின் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து, ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என சகாயம் குழு 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜாரன வழக்கறிஞர், கிரானைட் முறைகேடு தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 வாரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கால அவகாசம் வழங்கியதுடன், வழக்கின் விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.