தொடர்ந்து இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பாலில் விஷம் கொடுத்து கொன்ற பாட்டி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
போச்சம்பள்ளி அருகில் உள்ள பாரூர் நாகர்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஓசிராஜா(26.) கூலி தொழிலாளியான இவருக்கு சத்யா(23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஏற்கனே ஸ்ரீமதி என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதியன்று பாரூர் அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்தில் சத்யாவிற்கு ஆழகான பெண் குழந்தை நல்ல முறையில் பிறந்தது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த செவலியர் மங்கை மாதமாதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக நாகர்குட்டை பகுதிக்கு செல்வார். அதுபோல் சத்யாவின் பெண்குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். அதனை தொடர்ந்து 22.07.2018 அன்று செவலியர் மங்கை அப்பகுதியில் உள்ள சத்யா வீட்டிற்கு சென்று தன் குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சத்யா தன் குழந்தையை தனது அக்கா எடுத்து சென்றுள்ளார் என கூறி உள்ளார்.
தொடர்ந்து ஒரு வாரம் சென்று விசாரித்தபோது சத்யாவிடம் சரியான பதில் இல்லாத காரணத்தால் சந்தேசம் அடைந்த செவலியர் மீண்டும் அங்கு சென்று விசாரணை நடத்திய போது சத்யா தனது குழந்தை கடந்த 24.06.2018 தேதி மூச்சி திணறி இறந்து விட்டது என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து செவலியர் மங்கை காவேரிப்பட்டிணம் வட்டரா மருத்துவர் டாக்டர் ஹரிராமிடம் புகார் கூறி உள்ளார். ஹரிராம் இதுகுறித்து பாரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் குழந்தையின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து 01.08.2018 அன்று வீட்டருகே உள்ள மலையடிவாரத்தில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் காவேரிப்பட்டிணம் வட்டார ஆராம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹரிராம் மற்றும் மருத்துவ குழுவினர்கள் பிரேதத்தை எடுத்து பரிசோதனை நடத்தினர். இறந்த குழந்தையின் பாகங்கள், மற்றும் பால் புட்டி ஆகியவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று (21.10.2019) பொட்டியம்மாள் பாரூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பரிசோதனையின் முடிவில் ஓசிராஜாவின் தாயார் பொட்டியம்மாள் (48) என்பவர் பாலில் குருணை மருந்து கலந்து பெண் குழந்தையை கொன்றது தெரிய வந்தது. மகனுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்த காரணத்தால் குழந்தைக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து பாரூர் போலீசார் அவர் மீது கொலை வழக்கு (302 (1)) பதிவு செய்து, கைது செய்தனர். இதனையடுத்து பொட்டியம்மாள் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து அவர் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டு தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.