திருப்பூரில் 103 வயதை எட்டிய மூதாட்டிக்கு 5 தலைமுறையினர் இணைந்து பிறந்தநாள் கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்டம் அணைப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமாத்தாள். இவருக்கு 102 வயது முடிந்து நேற்று 103 வயது பிறந்தது. இதனையடுத்து ராமாத்தாளின் பேத்திகள், எள்ளுப்பேரன்கள் உட்பட 5 தலைமுறையினர் இணைந்து அவரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.
இன்றைய கால கட்டத்தில் 70 ஆண்டுகள் வாழ்வது என்பதே பெரிய விஷயமாக உள்ள நிலையில் 103வது பிறந்த நாள் கொண்டாடும் ராமாத்தாள் அவருக்கான தேவைகளை இன்றும் அவரே கவனித்துக் கொள்கிறார். அத்தோடு, பேரன்கள், பேத்திகள் உள்பட ஊர் மக்களையும் எளிதாக அடையாளம் கொண்டு கொள்கிறார். இது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ராமாத்தாளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ராமாத்தாளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு பெண்கள் என மொத்தம் 5 குழந்தைகள். அவர்களது, குழந்தைகள் மற்றும் அவர்களின் பேத்தி என 5 தலைமுறையினராக சேர்ந்து மொத்தம் 42 பேர் ராமாத்தாளின் குடும்பத்தில் உள்ளனர்.