தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் வண்டிகள் உட்பட அனைத்து பால் வண்டிகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பால் வண்டிகளிலும் ஜிபிஎஸ் கருவியை 4 மாதங்களுக்குள் பொருத்த வேண்டும் என்றும், பாலின் தரத்தை கண்டறியும் லாக்டோ மீட்டர், ஸ்கேனிங் கருவி மற்றும் எடை கண்டறியும் கருவிகளையும் பொருத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் ஆவின் நிறுவத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தர ஆய்வு செய்யப்படுவதால் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாக பால் கூட்டுறவு சங்கத்தலைவர் குமார் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் 4 மாதங்களுக்கு அனைத்து பால் வண்டிகளிலும் கருவிகளை பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.