கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உறுதியளித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர் இந்த உறுதியை அளித்தார். மேலும், மத்திய
அரசின் உதவியுடன் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும்,
மூன்று அமைச்சர்கள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை முடுக்கி விடுவதாகவும் கூறினார்.
மேலும், தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்ன? ஆயிரம் தேர்தல் வந்தாலும் அதிமுக
வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். நீராபானம் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அதன் மூலம் தென்னை
விவசாயிகள் இரட்டிப்பு வருமான பெற முடியும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விழாவில்
மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.