Sivadas Meena  pt desk
தமிழ்நாடு

பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தகவல்

பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

webteam

மழைநீரை அகற்றுவதற்காக வைக்கப்பட்ட மின்மோட்டார் பழுது ஏற்பட்டதன் காரணமாக சென்னை கிண்டி நகர்புற சதுக்க சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் அப்பகுதியில் உள்ள மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக முடிக்கப்படும்.

chennai rain

மீனம்பாக்கம், ஆலந்தூர் நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் 16 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பெரிய அளவில் எந்த விதமான பாதிப்பும் இல்லை. 83 புகார்கள் வந்துள்ள நிலையில், அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது.

சென்னையில் மொத்தம் 22 சுரங்கப் பாதைகள் உள்ளன. இதில், கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர்த்து மற்ற சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து இடையூறு இன்றி மக்கள் பயணம் செய்கின்றனர். வட சென்னை பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கபாதை அடுத்த ஒருமணி நேரத்துக்குள் போக்குவரத்து சீர் செய்யப்படும்.