சிறப்புக்காட்சி என்ற பெயரில் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதால்தான் அனுமதி தரப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "சிறப்புக்காட்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதால்தான் அதற்கு அனுமதிக்கவில்லை. முறையான கட்டணம் வசூலித்தால் சிறப்புக்காட்சி அனுமதியை அரசு பரிசீலிக்கும். பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்தி சிரமப்படக்கூடாது என்பதால்தான் நடவடிக்கை. பொதுமக்களின் நலன் கருதியே அரசு நடவடிக்கை எடுக்கிறது" என்றார் ஜெயக்குமார்.