தமிழ்நாடு

“மதுவை டோர் டெலிவரி செய்ய முடியாது” - தமிழக அரசு

“மதுவை டோர் டெலிவரி செய்ய முடியாது” - தமிழக அரசு

webteam

டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் எனவும், பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை ஊரடங்கு நேரத்தில் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த தமிழக அரசு, டாஸ்மாக் மது விற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது என தெரிவித்தது.

அத்துடன் மதுவை வீடுதோறும் சென்று டோர் டெலிவரி செய்ய முடியாது என்றும், டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளைப் போல மதுக்கடைகள் திறக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மொத்த விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என்றும் பதிலளிக்கப்பட்டது. இந்த வழக்கில் மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா தெரிவித்தனர்.