தமிழ்நாடு

அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் வந்தவர் பலி : ஓசூர் அருகே சோகம்

அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் வந்தவர் பலி : ஓசூர் அருகே சோகம்

webteam

ஓசூர் அருகேயுள்ள சூளகிரியில் அரசுப்பேருந்தும், இருசக்கரவாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஐயப்பன் என்பவர் பலியானார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சூளகிரி பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக அப்பேருந்து சர்வீஸ் சாலையில் சென்றுள்ளது. அதேநேரம் எதிர் திசையில்
சூளகிரியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி இருசக்கரவாகனத்தில் இரண்டு பேர் சென்றுள்ளனர்.

அப்போது அரசுப்பேருந்தும், இருசக்கரவாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற பென்னிக்கல் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் சம்பவ இடத்திலே பலியானார். மற்றொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.