தமிழ்நாடு

3 மணி நேரத்தில் கரையை கடக்கும் கஜா

3 மணி நேரத்தில் கரையை கடக்கும் கஜா

webteam

கஜா புயல் வேதாரண்யம்-நாகை இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது.  இன்னும் 3 மணி நேரத்தில் முழுமையாக கரையை கஜா கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொருட்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டால் அதனை எடுக்க முயற்சி எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே நாகை பகுதியில் சுமார் 80-100 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. புயலில் முன் பகுதி கரையை கடக்க தொடங்கியிருக்கிறது

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், வேதாரண்யம்-நாகை இடையே கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி க்ரையை கடக்கும். அப்போது சுமார் 100 கி.மீ முதல் 120 கி.மீ வரை புயலின் வேகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னல் மற்றும் மழை பெய்து வருகிறது. 

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 67,168 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் 10,420 பேர், நாகையில் 44,087 பேர், ராமநாதபுரத்தில் 913 பேர், தஞ்சையில் 4,678 பேர், புதுக்கோட்டையில் 1,881 பேர் மற்றும் திருவாரூரில் 5,189 பேர் முகாம்களில் உள்ளனர்.