தமிழ்நாடு

ஆளுநர் மீது வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி

ஆளுநர் மீது வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி

webteam

தமிழக அரசியல் சூழல்குறித்து நாளைக்குள் முடிவுகாணாவிடில் ஆளுநர் மீது வழக்குத் தொடரப்படும் என்று பாஜக எம்பியும், மூத்ததலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநர் முடிவெடுக்காவிட்டால், அது குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்ற புகாரின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று பதிவிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32 கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். சசிகலாவுக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், அவரை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.