ஆளுநரின் தேநீர் விருந்து முகநூல்
தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த முக்கிய கட்சிகள்! பங்கேற்றது யார்?

ஆளுநரின் தேநீர் விருந்து விழாவில் தேசப்பற்று பாடல்கள், நாடகங்கள் நடத்தப்பட்டன. தனித்திறன் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

PT WEB

ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, சரத்குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாலகங்கா மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், கிருஷ்ணசாமி, எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் உள்ளிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் தேசப்பற்று பாடல்கள், நாடகங்கள் நடத்தப்பட்டன. தனித்திறன் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. எனினும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் புறக்கணித்தனர். தமிழக அரசு சார்பிலும் தேநீர் விருந்து புறக்கணிக்கப்பட்டது.