RN Ravi
RN Ravi PT Desk
தமிழ்நாடு

“சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

PT WEB

சென்னை கிண்டி ராஜ்பவன் தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவ மாணவியருடன் ‘தமிழ்நாடு தர்ஷன்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஏழு நாள் சுற்றுப்பயணமாக பனாரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 18 மாணவ - மாணவியர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் இதற்காக தமிழ்நாடு வந்துள்ளனர்.

RN Ravi

இதில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறும் தமிழ்நாட்டுக்கு உண்டு. இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.

பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழை ஆழமாக படிக்க வேண்டும். தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ்பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும்.

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது
- ஆளுநர் ஆர்.என்.ரவி
திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன
ஆளுநர் ஆர்.என்.ரவி

2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்க்கல்வியை தமிழில் பயில வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்” என்றார்.