செய்தியாளர்: மோகன்ராஜ்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி ஆளுநர் வெளியேறியது மரபை மீறிய செயல். சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம்.
திமுகவிற்கு கருப்பு மேல் என்ன வெறுப்பு. நீட் தேர்வின் போது செய்த நடவடிக்கைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. கருப்பு ஆகாது என்றால் திமுக கொடியிலிருந்து கருப்பு நிறத்தை எடுத்து விடுவீர்களா என்று கேள்விகளை எழுப்பினார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கள்ளக்குறிச்சி சம்பவம் ஆகியவற்றை அரசு மூடி மறைக்க பார்க்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் நாம் தமிழர் கட்சி கட்டாயம் போட்டியிடும் என்று சீமான் கூறினார்..