தமிழ்நாடு

ஆளுநர், முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து

ஆளுநர், முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து

webteam

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தமிழக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், தீயவை அகன்ற இந்த தீப ஒளித் திருநாளில், உறவும், சகோதரத்துவமும் வலுப்பெறட்டும் என்று கூறியிருக்கிறார். அது, தூய்மையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க உதவுட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்களுக்கு இந்த தீபாவளி மகிழ்ச்சியையும், செழுமையையும் தரட்டும் என்றும் ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மறம் வீழ்ந்து அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திருநாள் விளங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த நாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும், இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என்று வாழ்த்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.