தமிழ்நாடு

அரசுகள் மாறினாலும், துரோகம் மாறவில்லை- வைகோ

அரசுகள் மாறினாலும், துரோகம் மாறவில்லை- வைகோ

webteam

இந்தியாவில் அரசுகள் மாறினாலும், துரோகம் மாறவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரை அருகே இலங்கை போரில் இறந்த ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் பேரணி நடைப்பெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றனர். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை வரை பேரணியாக நடைபெற்றது. இதனால் மெரினாவில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுயிருந்தனர்.

அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம் என்றும், இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்தக்கூடாதா? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்தியாவில் அரசுகள் மாறினாலும், துரோகம் மாறவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனை அடுத்து மெரினா நினைவேந்தல் பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கைதாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். 

போலீஸ் அறிவுறுத்தலை தொடர்ந்து நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் கைதாகினர். கைது செய்யப்படுபவர்களை ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.