டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் 67 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டது. அதில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேரும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதுபோக மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 5 பேர் பன்றி காய்ச்சலுக்கும் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் 98 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.