புதுக்கோட்டை pt
தமிழ்நாடு

புதுக்கோட்டை| கழிப்பறையை சுத்தம் செய்த அரசுப்பள்ளி மாணவர்கள்.. நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10ஆம் தேதி தலைமை ஆசிரியர், மாணவ மாணவியர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகத்திடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பள்ளியில் நேராகச்சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் அப்போது ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் அந்த பகுதி மக்களிடம் நடந்த விபரங்களை கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்தர்.

மேலும் கேட்டறிந்ததில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னது உண்மைதான் என்று அந்த பகுதி பெற்றோர்கள் கூறியதாகவும், இது தொடர்பாக நாளை சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டு, கழிவறையை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.