தமிழ்நாடு

ஏழு ஆண்டுகளாக ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசுப்பள்ளி

ஏழு ஆண்டுகளாக ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசுப்பள்ளி

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஒரே ஒரு ஆசிரியருடன் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு பள்ளி இயங்கி வருகிறது.

ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர். ரத்தினகிரி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த இந்தப் பள்ளியில் 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரே ஒரு ஆசிரி‌யரே பாடம் எடுக்கும் நிலை உள்ளது. 

பள்ளியின் தலைமை ஆசிரியரான சுப்பிரமணியே, ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்‌ பாடம் எடுக்கிறார். முன்பு 150க்கும் அதிகமானோர் படித்த பள்ளியில் தற்போது 27 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். 

தலைமை ஆசிரியர் பணி, அனைத்து பாடங்களுக்கான பணி என ஒருவரே பள்ளிக்கான அனைத்து பொறுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார் என்றும், இதனால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ: