தமிழ்நாடு

அரசுத் திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

அரசுத் திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

Rasus

அரசின் சலுகைகளையும் மானியங்களையும் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க, அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அனைவருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை வழங்குவதற்காக ஆதார் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் தனிநபர் பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மூலமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் மானியம், சமையல் எரிவாயு மானியம், உர மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகளை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியம் பெற, ஆதார் எண்ணை சமர்ப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த அவகாம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக (டிசம்பர் 31) மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண் பெற இது வரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மட்டுமே இந்த அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தரப்பினருக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை அரசின் சலுகைகள் வழக்கம்போல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.